வறட்டு இரும்பல் குணமாக என்ன செய்ய வேண்டும் அடிக்கடி சளி பிடிப்பதை குணப்படுத்த என்ன செய்ய வேண்டும்

வறட்டு இரும்பல் குணமாக என்ன செய்ய வேண்டும் அடிக்கடி சளி பிடிப்பதை குணப்படுத்த என்ன செய்ய வேண்டும்

வரட்டு இருமல் குணமாக என்ன செய்ய வேண்டும் அடிக்கடி சளி பிடிக்கிறது அதை குணப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக நாம் பார்க்க போகின்றோம். பொதுவாக குளிர் காலம் என்று வந்துவிட்டால் அல்லது ஈரமான பழங்களோ பொருட்களோ சாப்பிடுவதால் ஒவ்வொருவர் ஒவ்வொருவருக்கு ஒத்துக்கொள்ளாமல் உடனடியாக வரட்டு இருமல் சளி ஆரம்பித்து விடுகிறது அப்படி இருக்கக்கூடியவர்கள் எளிமையான வீட்டு மருத்துவ முறையில் எப்படி குணப்படுத்துவது என்பதை பற்றி தெளிவாக இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.



மூலப் பொருள்

சித்தரத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுத்து கசாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் சளி குணமாகும்.

விளக்கம்

ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வாமை என்று சொல்லப்படுகின்ற ஒரு விஷயம் இருக்கும் சிலருக்கு ஈரமான பழங்களோ பொருட்களோ சாப்பிட்டால் உடனடியாக சளி இரும்பல் தும்மல் ஆரம்பித்து விடும் அப்படி இருக்கக்கூடியவர்கள் குளிர்காலங்களில் ஈரமான பொருட்களை எடுத்துக் கொள்வதை குறைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அது நோயல்ல ஒவ்வாமை உங்களுக்கு அந்த விஷயம் ஒத்துக் கொள்ளவில்லை உங்களுடைய உடலுக்கு அது ஒத்துக்கொள்ளவில்லை என்று அர்த்தம் முடிந்தவரை இரும்பல் சளி வந்தவர்கள் சித்தரத்தையும் பனங்கற்கண்டையும் இரண்டையும் சம அளவு எடுத்து கஷாயம் வைத்து மூன்று வேலைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் சளி முற்றிலும் குணமாக்கப்படும்.