1. பூசணிக்காயில் இருந்து விதையினை நீக்கி தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும் மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி சாறு எடுக்க வேண்டும் இத்துடன் மிளகு சீரகத்தூள் உப்பு அல்லது சர்க்கரை கலந்து அப்படியே சாப்பிடலாம் தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டால் குடல் புண் குணமாவதை உணர முடியும்
2. அகத்திக் கீரையை தினமும் உணவில் சேர்த்தால் குடல் புண் குணமாகும்
3. மாதுளம்பழத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி ஜூஸாக எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் தேன் கலந்து சாப்பிட வயிற்றுப் புண், வயிற்று வலி ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
4. அத்திக்காயை சிறுபருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் அல்சருக்கு தீர்வு கிடைக்கும். அம்மான் பச்சரிசிக் கீரையுடன் மஞ்சள், ஓமம் இரண்டையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் குடல்புண் குணமாகும்.
5. நெல்லிக்காய்ச்சாறு எடுத்து அதில் தினமும் 30 மில்லி அளவுக்கு சாப்பிட்டால் குடல்புண் ஆற வாய்ப்புள்ளது.
6. ஏலம், சுக்கு, கிராம்பு, சீரகம் தலா 50 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ள வேண்டும். இதில் இரண்டு கிராம் அளவுக்கு தினமும் இரண்டு வேளை சாப்பிடலாம். இதன் மூலம் குடல் புண் மற்றும் வயிற்றுவலி குணமாகும்.
7. கசகசாவை தேங்காய்ப்பாலில் ஊறவைத்துச் சாப்பிட்டாலும் வயிற்றுப் புண் குணமாகும்.
தினமும் இந்த ஆறு வகையான முறைகளில் ஏதாவது ஒரு முறையை நீங்கள் ஒவ்வொரு வாரமும் கடைப்பிடித்து வந்தால் கண்டிப்பாக உங்களுடைய குடல்புண் பிரச்சனை நீங்கும் எவ்வளவு வயிறு எரிச்சலாக இருந்தாலும் குணமாகும் அல்சர் என்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்த மாட்டீர்கள் அல்சர் குணமாக எளிய வீட்டு மருத்துவ முறை இதை பயன்படுத்தி பாருங்கள் கண்டிப்பாக நல்லவிதமான ரிசல்ட் உங்களுக்கு கிடைக்கும்
