சூரிய திசையில் குரு புத்தி பலன்கள் / Suriya Thisai Guru puthi Palangal in tamil

சூரிய திசையில் குரு புத்தி பலன்கள் / Suriya Thisai Guru puthi Palangal in tamil 

சூரிய தசையில் குரு புக்தி 9 மாதங்களும் 18 நாட்களும் இருக்கும்.

குரு புக்தியில் பல நன்மைகள் ஏற்பட ஹேது உண்டு. வியாபார விருத்தி ஏற்படும். செல்வங்கள் சேரும். குடும்பத்தில் க்ஷேமகரம், புத்திர ப்ராப்தியுண்டாகும். இல்லறம் நல்லறமாகும் எப்படியிருந்தால் ? குருபகவான் லக்னத்தில் வாக்கு ஸ்தானம் - திரிகோண லாபஸ்தானத்தில் இருந்தால் மேற்குறிப்பிட்ட எல்லா நன்மைகளும் ஏற்படும்.
இவ்வாறன்றி குருதேவர் 3, 6, 8, 12 இந்த ஸ்தானங்களில் இருந்தாலும், சனி, இராகு, கேது இவர்களுடைய பார்வை பெற்றாலும் பலவித தொல்லைகள், கஷ்ட்டங்கள், குடும்பத்தில் சீர்கேடு வருமானக் குறைவு வறுமை, வியாதிகளால் கஷ்டங்கள் எல்லாம் ஏற்பட்டு வாழ்க்கையில் எவ்வித பிடிப்பும் இல்லாமல் வாழ நேரிடும்.