சனி மஹா திசையில் சந்திரன் புத்தி பலன்கள் / Sani maha Thisai Chandra puthi Palangal in tamil

சனி மஹா திசையில் சந்திரன் புத்தி பலன்கள் / Sani maha Thisai Chandra puthi Palangal in tamil 

சனி மஹா தசையில் சந்திரன் புக்தி ஒரு வருடம் ஏழு மாதங்கள்.
புக்தி நாதனாகிய சந்திரன் கோண திரிகோண குடும்ப லக்னாதிபதியாயிருந்து தசாநாதனாகிய சனி பகவானுக்கு கேந்திரத்தில் ஆட்சி உச்சம், நட்பு ஸ்தானத்திலிருந்தால் சுகபோகங்களை அனுபவிக்கும் வசதிகள் பெருகும். தொழிலில் லாபம் உத்தியோகத்தில் உயர்வு நண்பர்கள் மூலம் நன்லம் உண்டாகும்.

ஆனால் புக்தி நாதனாகிய சந்திரன் பகை நீச ஸ்தானத்தில் இருந்து சனி பகவானுக்கு மறைவு ஸ்தானத்திலிருந்தால் பொருள் நஷ்டம், பித்த சம்பந்தமான ஜுரம், மனோவியாதி இவைகளே பலன்களாகும்.