ரிஷப லக்னம் பிறந்தவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்
ரிஷப லக்னத்தில் பிறந்தவர் செல்வச் சீமானாக வாழும் அமைப்பு இருக்கிறது. நல்லவளும், அழகுள்ளவளுமான மனைவியை அடைந்து சந்தோஷ வாழ்க்கை அனுபவிப்பார். எப்போதும் கூடுமான வரையில் மன நிம்மதியுடனேயே வாழ்வார். கணக்கில் வல்லவராக இருப்பார். ரிஷப லக்னத்திற்கு சூரியனும், சனியும் நல்லவர்கள். லக்னத்தில் இந்த சுபர்கள் இருந்தாலும். பார்த்தாலும் ஆயுள் 75 என்று சொல்லலாம். குரு, சந்திரன், சுக்கிரன் பாவிகள். சனி ஒருவரே இவர்களுக்கு ராஜயோகம் கொடுப்பார்.