ராகு திசையில் சனி புத்தி பலன்கள் / Rahu Thisai Sani puthi Palangal in tamil

ராகு திசையில் சனி புத்தி பலன்கள் / Rahu Thisai Sani puthi Palangal in tamil 

ராகு தசையில் சனி புக்தி இரண்டு வருடங்கள், பத்து மாதம், ஆறு நாட்கள்.

சனிபகவானுடைய ஸ்தானத்தைக் கவனிக்கும்போது இவர் ஆட்சி, உச்சம், நட்பு ஸ்தானத்திலிருந்து தசாநாதனாகிய ராகுவின் திரிகோணகேந்திர ஸ்தானத்தில் இருந்தால் எல்லா விஷயங்களையும் இனிது முடிக்கும் சாமர்த்தியம், சமயோசித புத்திசாலித்தனம், மனோதைரியம், வீரத்தன்மை எல்லாம் ஜாதகரிடம் பிரகாசிக்கும். வாழ்க்கையும் முன்னேற்றத்தைக் காண்பார். இரும்பு அல்லது வேறு கறுப்பு வஸ்துக்களின் வியாபாரத்தின் மூலம் லாபத்தைக் காண்பார். உத்தியோக விருத்தியும் ஏற்படும்.
பக்தி நாதனாகிய சனி நீசத்திலிருந்தாலும் ராகுவுக்கு மறைவு ஸ்தானத்திலிருந்தாலும் கெட்ட பலன்களே ஏற்படும். பல நஷ்டங்களும் வாழ்க்கையில் குறுக்கிடும்.