மேஷம் லக்னம் பிறந்தவர் பலன்கள் / Mesham Lagnam palangal in Tamil

மேஷம் லக்னம் என்றால் என்ன.?

மேஷ லக்னத்தில் பிறந்தவர் செல்வங்களைச் சேர்ப்பதில் கருத்துள்ளவராக இருப்பார். அறிவும், அழகும் பொருந்தி இருக்கும் பிறரிடம் பழகுவதில் சௌஜன்யமாக இருப்பார். பலர் விரும்பும் வண்ணம் நடந்து கொள்வார்.
மேஷ லக்னத்தில் சுபர்கள் இருக்க அல்லது சுபர்களால் பார்க்க பூரண ஆயுளுடன் இருப்பார் என்று சொல்லலாம். இவர்களுக்கு சூரியன், குரு, சுபர்கள், குருவோடு சனி சம்பந்தப்பட்டால் குரு எப்போதும் தன் பலனையே கொடுத்து வருவார். சூரியனும், குருவும் யோகக்காரர்கள். இருவரும் ஒன்றாக கூடினால் நல்ல பலன்களையே கொடுத்து வருவார்கள். புதன், சுக்கிரன், சனி இம் மூவரும், இவர்களுக்கு பாவிகள் புதன் மூலம் மாரகம் (மரணம்) இல்லை சனி சுக்கிரன் மூலம் மாரகம் ஏற்படும்.