கடகம் லக்னம் பிறந்தவர்கள் பலன்கள் / Kadagam Lagnam palangal in tamil

கடக லக்னம்

கடக லக்னத்தில் பிறந்தவருக்கு வேறு பெண்கள் பேரில் நாட்டம் இருக்கும் என்று சொல்லலாம். தந்தை சொல்லுக்கு அதிகமாக மதிப்பு கொடுக்க மாட்டார்கள். இதனால் இவர்களுக்குச் சிறிது கெட்ட பெயர்கள் உண்டாகலாம். தான தர்ம செய்வதில் தாராள மனப்பான்மை இருக்கும். செல்வங்கள் இவர்களை வந்தடையும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள்.
கடக லக்னத்திற்கு செவ்வாயும், குருவும் சுபர்கள். செவ்வாய் யோககாரகன், செவ்வாயும் குருவும் சேர்ந்திருந்தால் நல்ல யோகத்தை கொடுத்து வாழ்க்கையை உயர்த்துவார்கள். சூரியன், புதன், சுக்கிரன் மூவரும் பாவிகள். சனி, சுக்கிரன், புதன் மாரகாதிபதிகள். இவர்கள் மாரக ஸ்தானத்தில் இருந்தால் மாரகத்திற்கு சமமான கண்டத்தைக் கொடுப்பார்கள்.