குரு மஹா சந்திர புக்திக்கு ஒரு வருஷம், நான்கு மாதங்கள் உண்டு.
சந்திரன் கேந்திர திரிகோணத்தில் அல்லது ஜனன லக்னாதிபதியாய், குரு பகவான் ஆட்சி, உச்சம். நட்பு ஸ்தானாத்திலிருந்தால் குடும்பம் நல்ல முறையில் நடக்கும். குரு உபதேசம் பெறும் சந்தர்ப்பமும் பெறுவார்கள். உத்தியோக உயர்வு, லக்ஷ்மி கடாட்சம் பெற்று சந்தோஷத்தை அனுபவிப்பார்கள்.
இவ்வாறு இல்லாமல் புக்தி நாதனாகிய சந்திரன் பகை நீச ஸ்தானத்திலிருந்து தசாநாதனாகிய குருவுக்கு 8. 6, 12 ஸ்தானங்களில் இருந்தால் கண்டத்திற்கொப்பான வியாதி இம்சை ஏற்படும். வருமானக் குறைவு, பல தொல்லைகள் சேர்ந்து உற்சாகத்தை இழக்கச் செய்யும்.