அங்காரக திசை : சுய புத்தி பலன்கள் / Chevvai Thisai suya puthi Palangal in tamil

அங்காரக திசை : சுய புத்தி பலன்கள் / Chevvai Thisai suya puthi Palangal in tamil 

அங்காரக தசைக்கு ஏழு வருஷங்கள் உண்டு. சுயபுக்தி ஏழு மாதங்கள் இருபத்தேழு நாட்கள் இருக்கும்.

தசாநாதனும், புக்திநாதனும் அங்காரகன் ஆனபடியால் இவருடைய நிலையைக் கொண்டு பலன்களை நிர்ணயிக்க வேண்டும்.
அங்காரகன் என்று சொல்லப்படும் செவ்வாய் ஆட்சி ஸ்தானத்திலோ, உச்சம் அல்லது நட்பு ஸ்தானத்திலோ இருந்தால் புகழ் ஓங்கும் எல்லோரும் இவரை விரும்புவார்கள் எல்லா விதமான லாபங்களும், நன்மைகளும் தானாகவே வந்தடையும். நிலம், வீடு. வாகனங்கள் ஏற்பட்டு சுகவாழ்வு வாழ்வார்கள்.

ஆனால் கெட்ட பலன்களையே கொடுத்து கஷ்டப்படுத்தும் நிலையென்ன வென்றால் தசாநாதனும் புக்தி நாதனுமாகிய செவ்வாய் நீச்சம், பகையென்னும் ஸ்தானங்களில் இருந்தாலும், ஜனன லக்னத்திற்கு மறைவாகவும் கேது, ராகு. சனி இவர்களுடைய பார்வை பெற்றிருந்துவிட்டாலும் சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டியதாக ஏற்படும். கஷ்டங்கள் அனுபவிப்பார்கள்.