அங்காரக திசையில் புதன் புத்தி பலன்கள் / Chevvai Thisai puthan puthi Palangal in tamil

அங்காரக திசையில் புதன் புத்தி பலன்கள் / Chevvai Thisai puthan puthi Palangal in tamil 

அங்காரக தசையில் புதன் புக்தி பதினோரு மாதங்கள் இருபத்தேழு நாட்கள் இருக்கும்.

புத பகவான் ஜனன காலத்தில் திரிகோண ஸ்தானத்தில் ஆட்சி, உச்சம், நட்பு ஸ்தானத்திலிருந்தாலும், அங்காரகனுடைய கேந்திராதிபத்தியம் பெற்றிருந்தாலும், திரவிய லாபத்திற்குக் குறைவு என்பது இருக்காது. பந்துக்களின் அபிமானமும், சேர்க்கையும் ஏற்படும். புத்திர பாக்கியம், உத்தியோக உயர்வு. வியாபார விருத்தி எல்லாம் ஏற்படும்.

ஆனால் அங்காரகனுக்கு புதன் மறைவு ஸ்தானத்திலிருந் தால் மதிமயக்கம், சித்தப்பிரமை, மூளைக் கோளாறு இவைகள் ஏற்பட வேதுவுண்டு. மனதில் பயம், வாழ்க்கையில் வறுமை இருந்து கொண்டேயிருக்கும்.