சந்திரன் மகாதசை பத்து வருஷங்கள். இதில் சந்திரன் சுய புக்தியானது பத்து மாதங்களாகும்.
சந்திரன் நல்ல நிலையிலிருந்தால் நல்ல பலன்களையே கொடுப்பார். அதாவது அவர் லக்னத்தில் இருந்தாலும், திரிகோணத்தில் இருந்தாலும், கேந்திரத்தில் இருந்தாலும் வாக்கு ஸ்தானத்தில் இருந்தாலும் நல்ல பலன்களையே கொடுப்பார். செல்வங்கள் மேன்மேலும் சேரும், அவரை எல்லோரும் விரும்புவார்கள். வித்தைகளில் தேர்ச்சி பெறுவார். உத்தியோகம் உயர்வுகள் தானாகவே கிட்டும். எல்லோராலும் புகழப்படுவார். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.
இதை விட்டு ராகு, கேது, சனி இவர்களுடைய சம்பந்தமிருந்தாலும், இவர்களுடைய பார்வையைப் பெற்றாலும். வியாதிகள் பீடிக்கும். புத்தி மாறாட்டம் ஏற்படவும் கூடும். துன்ப வாழ்க்கையே வாழ வேண்டியதாக இருக்கும்.