சந்திரன் திசையில் சுக்கிர புத்தி பலன்கள் / Chandran Thisai sukra puthi Palangal in tamil

சந்திரன் திசையில் சுக்கிர புத்தி பலன்கள் / Chandran Thisai sukra puthi Palangal in tamil 

சந்திரன் தசையில் சுக்கிர புக்தி ஒரு வருடம் எட்டு மாதங்கள் இருக்கும். சுக்கிர பகவான் நல்ல நிலைமையில் இருந்தால் எவ்வளவோ நன்மைகள் ஏற்படும்.
நல்ல நிலைமையில் இருப்பதென்றால் சுக்கிர பகவான் ஆட்சி, உச்ச, நட்பு இந்த ஸ்தானங்களில் இருந்து தசாநாதனாகிய சந்திரனுக்கு திரிகோண கேந்திர ஸ்தானத்திலிருந்தால் சகல நன்மைகளும் ஏற்படும். வசதிகள் தாமாகவே வந்தடையும். திரவிய லாபத்திற்கு குறைவேயில்லை என்னும் நிலைமை உண்டாகும். செய்தொழிலில் லாபங்களும், முன்னேற்றமும் கிட்டும். மனம் சஞ்சலமின்றி இருக்கும்.

சுக்கிர பகவான் சந்திரனுக்கு மறைவு ஸ்தானத்திலிருந் கன்யா ராசியில் சுக்கிரன் நீசமடைந்திருந்தாலும் தாலும், நன்மையான பலன்களையே எதிர்பார்க்க முடியாது. வீட்டில் வறுமை, மனதில் கவலை, முகத்தில் சோர்வு காணப்படும்.