சந்திரன் தசையில் கேது புக்தி ஏழு மாதங்கள் இருக்கும்
கேதுவின் நிலைமையை கவனிக்க வேண்டும்.
கேதுவானர் தசாநாதனாகிய சந்திரபகவானுக்கு 3, 6, 11லிருந்து குரு. சுக்கிரன் இவர்களுடைய பார்வை பெற்றால் பல நன்மைகள் ஏற்படும். செல்வத்திற்கு குறைவு இருக்காது. மனச்சாந்தி இருந்து கொண்டேயிருக்கும். ஞானம் பெருகும் பகவானுடைய தியானத்தில் ஜாதகர் ஈடுபடுவார். பலர் புகழும் நிலையை அடைவார்.
கேது நல்ல நிலையில் இல்லாமலிருந்தாலோ கெட்ட பலன்களே ஏற்படும். கவலைகள் பெருகும். மனம் எப்போதும் சஞ்சலப்பட்டுக் கொண்டேயிருக்கும். கவலையென்பது வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டிருக்கும்.