புதன் தோஷம் போக்கும் வழிபாடு
★ புதனால் ஒருவருக்கு திருமண தோஷம் ஏற்பட்டால் புதன்கிழமை தோறும் மகாவிஷ்ணுவை வழிபாடு செய்வது சிறப்பு.
★ புதன் தோஷம் நீக்க ஆல மரத்திற்கு ஒவ்வொரு புதன்கிழமையும் ஒரு குடம் தண்ணீர் எடுத்துக்கொண்டு மூன்று முறை ஆலமரத்தை சுற்றி வந்து அந்த ஆலமரத்திற்கு நீங்கள் ஊற்றுவதால் புதன் தோஷம் நீங்கும்.
★ விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
★ புதன்கிழமையில் விரதம் இருந்து நீங்கள் பெருமாளை வழிபாடு செய்வதன் மூலமாக புதன் தோஷத்தின் உடைய தாக்கங்கள் குறைக்கப்படுகிறது.
★ புதனுக்கு அதிபதியாக விளங்கக்கூடிய பெருமாளை நீங்கள் ஒவ்வொரு புதன்கிழமையும் துளசி மாலை அணிவித்து அவரை வேண்டிக் கொள்வதன் மூலமாக புதனுடைய தாக்கம் குறைந்து பல நன்மைகளை பெருமாள் உங்களுக்கு தருவார்