சூரியன் புக்தி பலன்கள் - sugan puthi palangal
சூரிய பகவானுடைய நிலைமையைக் கவனிக்க வேண்டும். சூரியன் புக்தி ஆறுமாதங்களே நீடிக்கும்.
தசாநாதனாகிய சந்திரனுக்கு சூரிய பகவான் திரிகோணம், கேந்திரம் இந்த ஸ்தானங்களிலாவது அல்லது சிம்ம ராசியில் ஆட்சி பெற்றிருந்தாலாவது நாளுக்கு நாள் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும், கவலைகள் ஒழியும். உத்தியோகத்தில் உயர்வு எதிர்பார்த்த நன்மைகள் பெரிய மனிதர்களுடைய ஒத்துழைப்ப பெரியோர் நேசம் எல்லாம் கிடைக்கும். ஆனால் சந்திரனுக்கு சூரியன் மறைவு ஸ்தானத்திலிருந்தாலும் பகை, நீசம், இந்த ஸ்தானங்களில் இருந்தாலும் தரித்திரம் தாண்டவமாடும் கவலைகள் பெருகிக் கொண்டேயிருக்கும். மனம் நிலை கொள்ளாமல் தவிப்பார்கள்.
