சனி புக்தி // குரு திசையில் சனி புத்தி பலன்கள் - guru thisai sani puthi palangal
குரு தசையில் சனி புக்தி இரண்டு வருஷம் ஆறு மாதம் பன்னிரெண்டு நாட்கள் இருக்கும்.
சனி பகவானுடைய நிலைமையைக் கவனித்தால் இவர் மகரம், கும்ப ராசியிலிருந்து புதன் சுக்கிரன் பார்வை பெற்று தசாநாதனாகிய குருவுக்கு கேந்திர திரிகோண ஸ்தானத்தில்
இருந்தால் மனோ தைரியம், திரவிய லாபம், வியாபார விருத்தி. உத்தியோக உயர்வு முதலிய நல்ல பலன்களே இருக்கும்.
ஆனால் சனி பகை, நீசத்திலிருந்து சூரியன் பகை அல்லது பார்வை பெற்று தசாநாதனுக்கு மறைவு, ஸ்தானத்தில் இருக்கும் வியாபாரத்தில் நஷ்டம், கைபொருள் நஷ்டம், மனக்கலக்கம், கடன்கார தொந்தரவு, அன்ன வஸ்திரத்திற்கே பஞ்சம் இவ்வாறு கெட்ட பலன்களையே சொல்ல வேண்டும்.
