ராகு புத்தி // அங்காரக திசையில் ராகு புத்தி பலன்கள் - chevvai thisai ragu puthi palangal

ராகு புத்தி // அங்காரக திசையில் ராகு புத்தி பலன்கள் - chevvai thisai ragu puthi palangal

அங்காரக தசையில் ராகு புக்தி ஒரு வருடமும் பதினெட்டு நாட்களும் இருக்கும்.


இராகுவின் ஸ்தானத்தைக் கொண்டு பலன்கள் சொல்ல வேண்டும். தசாநாதனுக்கு ராகுவானவர் கேந்திர ஸ்தானத்திலிருந்து ஆட்சி உச்சமாயிருந்தால் நல்ல பலன்களையே சொல்ல வேண்டும். பொருட்கள் சேரும். மனதில் உற்சாகம் பிரகாசிக்கும். மனதில் தைரியம் குடி கொண்டிருக்கும். எந்த காரியத்தையும் சாதித்து முடிக்கும் சாமர்த்தியம் இவர்களிடம் நிறைந்து காணப்படும்.

இவ்வாறு இல்லாமல் ராகு ஜனன லக்னத்திற்கு விரய ஸ்தானத்திலாவது சனியின் பார்வை பெற்றாகிலும் இருந்தால் நேர் எதிரிடையான பலன்களே நடக்கும். சத்ரு பயம், தரித்திரம், வியாதி, பல கஷ்டங்கள் இவைகளை அனுபவிக்க வேண்டியதாக ஏற்படும். நல்ல பலன்களைப் பற்றி சொல்ல முடியாத நிலை இருக்கும்.