சனி புத்தி // சந்திர திசையில் சனி புத்தி பலன்கள் - chandran thisai sani puthi palangal
சந்திர தசையில் சனி புக்தி ஒரு வருடம் ஏழு மாதங்கள் இருக்கும்.
சனிபகவான் 6, 10, 11 முதலிய ஸ்தானங்களில் இருந்தால் நல்ல பலன்களையே கொடுப்பார். வியாபார விருத்தி, செலவங்கள் வந்தடைதல், உத்தியோக உயர்வுகள் இவைகளிலும் கீர்த்தி பெருகும். சந்தோஷ வாழ்க்கை ஏற்படும்.
ஆனால் சந்திரன் மறைவு ஸ்தானத்தில் இருந்து விட்டால் நல்ல பலன்கள் ஏற்படாது. எந்த காரியமும் நடைபெறாது. குழப்பங்கள் மத்தியில் வாழ வேண்டியதாக ஏற்படும். மனக் கவலைகள் பெருகும். பித்த சம்பந்தமான வியாதிகள் பீடிக்கும்.
