மாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்
★ மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்வது லட்சுமி கடாட்சத்தை உண்டு பண்ணி உங்கள் குடும்பத்தில் செல்வத்தை பெருக்கும்.
★ குடும்பத்தில் நீண்ட நாட்களாக தடைப்பட்டு இருக்கும் சுப காரியங்கள் மங்கள நிகழ்வுகள் திருமண தடை இப்படி எது இருந்தாலும் நிவர்த்தியாகி மங்கல செய்திகள் வந்து சேரக்கூடிய தன்மையை இந்த மாவிளக்கு தீபம் உண்டு செய்யும்.
★ குடும்பத்தில் செல்வம் பெருகுவதற்கும் தொழிலில் செல்வம் கிடைப்பதற்கும் இந்த மாவிளக்கு தீபம் உதவுகிறது
★ சுபபோக வாழ்வு பெறுவதற்கு மாவிளக்கு தீபம் ஏற்று வழிபாடு செய்வது சிறப்பு.
★ அடிக்கடி நோயால் அவதை படக்கூடியவர்கள் மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்வதால் கண்ணுக்கு தெரியாத தோஷங்கள் நீங்கி நோய்களிலிருந்து விடுபடுவார்கள்