சனீஸ்வரனை வணங்குவது எப்படி.? சனிபகவான் இருக்கக்கூடிய பூர்வீக கோவில்கள் எது.!
சனீஸ்வரன் ஸ்தலங்கள்
1.திருநள்ளாறு
சூரியன் மனைவி ஸம்ஜ்ஞாதேவி, சூரியனின் வெப்பம் தாளாமல் சூரியனுக்கு தெரியாமல் தன் தந்தை வீட்டுக்குப் போக எண்ணி, ஸஞ்சிகை தன் நிழலையே ஒரு பெண்ணாகச் செய்து அங்கு விட்டுச் சென்றாள். அந்த நிழல் உருவத்துக்கு சாயாதேவி என்று பெயர். சாயாதேவியின் புதல்வன் சனி பகவான். சனிபகவான் காசிக்குச் சென்று தன் பெயரினால் ஒரு லிங்கத்தை நிறுவி, பூஜை செய்து. அதன் பலனாகக் க்ரஹ பதவியை அடைந்தான். அவனுக்குக் குளிகன் என்று ஒரு பிள்ளை உண்டு. மகர. கும்ப ராசிக்காரர்களுக்கு சனிபகவான் கெடுதல் செய்ய மாட்டான்.
