கண்களை சுற்றி கருவளையம் இருக்கிறதா எளிமையான வீட்டு மருத்துவ முறை கண் கருவளையம் போக என்ன செய்ய வேண்டும்.
மூலப் பொருள்
பரிட்சைக்கு படித்துப் படித்து மாணவர்களுக்கு கண்ணைச் சுற்றி கருவளையம் தோன்றிவிடும் அதற்கு இந்த நாட்டு மருத்துவம் கை கொடுக்கும் விளக்கெண்ணெய் 10 சொட்டு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் 10 சொட்டு கொஞ்சம் பன்னீர் சேர்த்து குழைத்து கண்ணை சுற்றி தடவலாம் பன்னீர் என்றால் ரோஜாப்பூ தண்ணீர்.
விளக்கம்
எட்டு மணி நேரம் நல்ல தூக்கம் இல்லாமல் விழித்துக் கொண்டு வேலை செய்யக்கூடிய அத்தனை பேருக்குமே இந்த கருவளையம் வந்துவிடுகிறது அதனால் கருவளையம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம். இந்த தூக்கம் இல்லாமல் போவது அதனால் 8 மணி நேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும் அதன் பிறகு இந்த முறையை நீங்கள் பயன்படுத்தினால் கண்டிப்பாக உங்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தை உங்களால் கூடிய விரைவில் உணர முடியும். ஒரு மாத காலம் பயன்படுத்துங்கள் ஒரு நல்ல ரிசல்ட் உங்களுக்கு கிடைக்கும் நம் முன்னோர்கள் சொன்ன எளிமையான வீட்டு மருத்துவ முறை.
